Friday, June 21, 2019

இரவின் மடியில்!



கருமை எங்கும் பொங்கி  மேலிட - வானில்
இளமை பொங்கும் வெள்ளி நீந்திட - கூடும்
இனிமை கொஞ்சும் கோடி நட்சத்திரம் - நோக்கும்
மழலை நெஞ்சம் நாடி பிடித்திடத் துடித்திடும்!


பயமே மேவி உளம் பதைத்திடும் - மௌன
மொழியே தாவி செவி புகுந்திடும் - நாளும்
அழகே தூவி இருள் மிளிர்ந்திடும் - கமழ்
மணமே வீச மலர் இரவதன் மடியினில்!

இருளே சூழும் பாதிப் பொழுதினில் - நிலவும்
அமுதே பாயும் சோதிப் பிழம்பினில்- விழியும்
துயிலே நாடும் ஆடி அடங்கிட - நிதமும்
உடலே ஓயும் ஓடிக் களைத்தபின் படுத்திட!

- கவிப்பூரணி

1 comment:

Popular Posts