கிழக்கே உதித்திடும் கதிரவன் - அவன்
திடமாய் உணர்த்திடும் ரகசியம், - நாம்
அழைத்தே அறிவிப்பு செய்குவோம் - அதை
மனதில் பதித்திடு தினந்தினம்!
இருட்டே விலகிடும் நாள்தோறும் - அது
நடக்கும் மகிழ்ந்திரு உள்ளளவும், - இக்
கருத்தை தந்திடும் பாங்குடனே - செஞ்
சுடரும் வானில் தோன்றுதடா!
உறக்கம் தவிர்த்திடும் கனவதுவே - மனச்
சுணக்கம் அகற்றிடும் சரிவினிலே - அங்கு
பிறக்கும் உணர்வினில் புதுத்தெம்பே - மடை
திறக்கும் இலக்கினை அடைவதற்கே!
செழுமையும் வளமையும் உனக்கெனவே - இவ்
உலகில் தோன்றிடும் எப்பொழுதும், - நீ
அழுகையும் சோர்வையும் விட்டுவிடு - ஆடும்
களத்தினில் இறங்கிடு துணிவுடனே!
நிலத்தே விழுந்திடும் விதையதுதான் - நிழல்
மரத்தே கொடுத்திடும் கனியமுதும் - எண்ணி
அகத்தே பதித்திடும் இலக்கதுதான் - ஒளி
முகத்தை உலகிற்குக் காட்டிடுமே!
அழகுக்கு பிறப்பிடம் நீயேதான் - உயர்
அறிவுக்கு உறைவிடம் நீயேதான், - எந்த
வழக்கையும் எதிர்த்தே போராடு - இந்த
வாழ்க்கையே உன் கையில் விளையாடு!
-கவிப்பூரணி
Awesome view on Sun shine! if everyone read this poem and feel the lines, Undeniably all days will be Fine!
ReplyDeleteSuper Mam.
மிக்க நன்றி திரு ஃபெர்னான்டஸ்...
DeleteNice lines....but I am not capable of intrepreting these lines..... beyond the grasp of imagination.
ReplyDeleteactually Naveen, I suppose that Its always enough to feel than to interpret. Thanks.
Delete