Thursday, January 31, 2019

புதிய அறிமுகங்களும், பழைய நி்னைவுகளும்

திருவிளையாடல் படத்துல நாகேஷ் புலவரா இருப்பாரு. அதுல ஒரு கேள்வி  கேட்பார்  சிவாஜி. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று. உடனே பதறிப் போய் நாகேஷ், இல்லை இல்லை, கேள்விகளை நானே கேட்கிறேன். ஏன்னா எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும்னு அவசரமா பதில் சொல்லுவார்.“என்ன? பீடிகை எல்லாம் பெருசா இருக்கே? திடீர்னு திருவிளையாடல் படத்துக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?” இப்டி எல்லாம் உங்க மனதின் குரல் என் செவியில் வட்டமிடுகிறது. வெயிட் வெயிட். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.


20.1.2019 ஞாயிற்றுக் கிழமை... மாலை சுமார் 6 மணி, அப்போதுதான் கடற்கரைக்குச் சென்று நானும் என்னவரும் வீடு வந்து சேர்ந்தோம். சரி சூடா எதாவது செய்திகள் வந்திருக்கானு வாட்சாப் திறந்து பார்க்க, தம்பி திருப்பதி மஹேஷ் காலம் செய்த கோலமடி எழுதிய நாவலாசிரியர் துளசிதரன் சாருடைய அலைபேசி எண்ணை ஏற்கனவே அனுப்பி இருந்ததை நினைவுபடுத்தி, நேரம் கிடைக்கும் போது பேசுமாறு சொல்லி இருந்தார். பேச வேண்டும் என்று அப்போதே அலைபேசியில் துளசி சாரைத் தொடர்பு கொண்டேன்.

அழகான மளயாளத் தமிழ், இல்லை இல்லை, தமிழ் மளயாளம், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அழகான உரையாடல். ஏதோ பயணத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். அவருடைய மகிழ்வை என்னால் உணர முடிந்தது. அது மட்டுமல்ல, அறிமுகமே இல்லாத என்னிடம் கூ்ட நீங்களும் முயற்சி செய்தால் புதினம் படைக்க முடியும் என்று கூறியது மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஒரு 5 அல்லது 10 நிமிடம்தான் பேசி இருப்போம். ஆனாலும் மிகவும் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் எங்களுக்குள் நடந்தது. அவருடைய வலைதளத்தில் எனதுமுதல் புதினமும், முதல் பார்வையும் என்ற புதினம் பற்றிய எனது பார்வையை 28.1.2019 அன்று  வெளியிட்டிருந்தார்கள்.

அதன் பிறகு 30.1.2019 அன்று பள்ளியில் ஒய்வு நேரத்தில் அலைபேசியை நோக்கினால், புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்திருந்தது. யாராக இருக்கும்? அழைத்தே கேட்டுவிடலாம் என்று அழைத்தால், கடைசியில் அது நம்ம கீதா மேடம். எதிர்பார்க்கவே இல்லை. இவங்களுக்கா கிட்டத்தட்ட மஹேஷ் வயசுல பையன் இருக்காங்க என்பதை நம்பவே முடியல. என்னைவிட இளமையான குரல் அவங்களுக்கு. மிகவும் நட்போடு பேசினார்கள். அப்போதுதான் துளசி சார் அவர்கள் எனது நூலின் பார்வை குறித்து  மிக்க மகிழ்ந்ததாகவும் நான் அழைத்திருந்த போது திருமன வரவேற்பில் இருந்ததால் சரியாக பேச இயலவில்லை என்று வருந்தியதாகவும் கூறினார்கள். கவலப்படாதீங்க சார் இப்பதான் அறிமுகம் கிடச்சுடுச்சு இல்ல, எதுக்கு்டா பேசுராங்கன்ற அளவுக்கு உங்கள ஃபீல் பண்ண வச்சுருவோமில்ல, அவ்வ்வ்வ்....

அதைவிடவும் மேடம் சொன்ன ஒரு விசயம் என்னை மிகவும் பாதித்தது. அதுதான் ஏஞ்சல் மேட்டர். ஏஞ்சல்,kaagidha pookal
 என்ற  ஒரு வலைதளத்தின் சொந்தக்காரர். மஹேஷின் நட்பு என்றதுமே நான் யார் என்று மிகச் சரியாக யூகித்திருக்கிறார். நான் யார் என்பதை கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்தும் நினைவில் வைத்திருக்கிறார் என்று கீதா மேடம் சொல்லிய போது எனக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம்  நெகிழ்வாகவும் இருந்தது. இன்றுதான்  தில்லையகத்து க்ரானிக்கல்ஸ் போய் கருத்திட்டவர்களின் கருத்துக்களைப் படித்த போது கீதா மேடம் சொல்லியது பொல் ேஞ்சல் அவர்களின் கருத்தைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி.

நான் ஏதோ ஆர்வக்கோளாறுல வலைப்பூ எழுத வந்தவள்தான் ஆனால் ஆண்டுகள் கடந்தும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் முகம் தெரியாத  ஏஞ்சலுக்கு இப்போது நான் நினைவுக்கு வருகிறேன் என்றால், என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ சிலரது உணர்வுக்குள்  ஒன்று படு மொக்கையாகவோ  அல்லது பாதிக்கும் அளவிற்கோ எழுத்தின் வழி ஊடுருவி இருக்க வேண்டும் என்று யோசிக்கத் தோன்றுகிறது. 6 ஆண்டுகள் எழுத்தின் பக்கம் வரவில்லை என்று பல நாட்கள் வருந்தி இருக்கிறேன் ஆனாலும் அதுவும் ஒரு நல்லதுக்குத்தான் போலும்.  மொழியைக் கடந்து ஏதோ ஒரு  உணர்வு மேலோங்குகிறது. ஏஞ்சல் மட்டுமல்ல, நம்ம DD சார் பொன்ற மூத்த பதிவர்கள், நவரசன் போன்ற சகோக்கள் அதே அன்போடு இப்போதும்.... நினைத்தாலே பிரம்மாண்டமாக இருக்கிறது....

கீதா மேடம் இன்னொன்னு கூட சொன்னாங்க... யாரோ ஒரு பதிவர் தாய்லாந்து போய்ட்டு ஜாலியா சுத்திப் பாத்துட்டு இன்னும் அதப் பத்தி வாயைக் கையைத் திறக்கவில்லை என்று மிகவும் வருந்தினார். அதிலும் அந்தப் பதிவர் மிகவும் நுட்பமாகவும் விளாவரியாகவும் எழுதுபவர் என்று கூட சொல்லி மிகவும் பாராட்டினார். 'மேடம்! உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சு என்ன பண்றது? சம்மந்தப்பட்டவங்களுக்கு அது எவ்வளவு சொன்னாலும் எறும மாட்டு மேல மழை பேஞ்சது பொல் இருக்கே’னு நானும் ஃபீல் பண்ணி சொன்னேன். ஆனாலும் மேடத்துக்கு அந்த பதிவரை விட்டுத்தர மனம் இல்லைதான்.  கடைசியில நானும் மேடமும் நிறையவே  பேசி முடிச்சொம். அதெல்லாம் சொல்லனும்னா பதிவு பத்தாது:)) 

பாட்டு எழுதி பேறு வாங்கும் புலவர்கள் ஒரு ரகம்னா, திருவிளையாடல் நாகேஷ் மாதிரி  குற்றம் கண்டுபி்டிச்சே பேறு வாங்கும் புலவர்களும் உண்டுதானே. அது போல, பெருசா எதுவும் சிறப்பாக எழுதத் தெரியாத நான்,   புதினம் படிச்சு என்னுடைய பார்வையைப் பகிர்ந்தது மூலம் புதிய அறிமுகங்களும் பழைய நினைவுகளும் புதிதாய் ஒரு கோணத்தில் இன்னதென்று சொல்ல முடியாத வகையில்  எனக்குள் எதையோ உணர்த்துவது போல் ஒரு உணர்வு எழுகிறது.  இதுவும் காலம் செய்த கொலமடி என்றே சொல்லத் தோன்றுகிறது.

15 comments:

  1. னல்ல விமர்சநம். that எருமமாடு முதல் பகுதியமட்டும் எழுதிட்டு சஸ்பெந்சோட விட்டுவச்சிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந். எப்படியாச்சும் நகர்த்தலாம்னு பார்த்தாக்கா, எறுமை மாடு அப்படியே நிக்குதே! முடியும் வரையும் முடியாத வரையிலும் முயற்சியைத் தொடர்வொம்

      Delete
  2. சிறப்பான பகிர்வு. நன்றாக எழுதி இருக்கீங்க... தொடர்ந்து எழுதுங்கள்....

    இனி தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.... சார். தங்கள் வரவு நல்வரவாகுக!

      Delete
  3. நாஞ்க இருக்கோம்!





    காலம் செய்த கோலமடி - படிக்க கிடைத்தால் நலம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி! நிச்சயம் கிடைக்கச் செய்வோம்!

      Delete
  4. ஆஹா கவிப்பூரணி இப்பூடியா!! ஹா ஹா ஹா....

    எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்க கூடப் பேசினதுல. சூப்பரா எழுதறீங்க எழுதுங்க...இனியும்...தொடர்ந்து எழுதுங்க...

    எங்களுக்கும் மகேஷ் மூலம் அரவிந்த், இப்ப நீங்கனு புது நட்புகள்...

    சரி மேடம் சொல்ல வேண்டாமே...ப்ளீஸ்!!

    அரவிந்த் வந்திருக்காரே!! சூப்பர் அரவிந்த்!! நீங்களும் எழுத ஆரம்பிக்கலாம்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஒகே ஓகே கீதா அக்கா..., இல்ல இல்ல ஆண்ட்டி! எழுதும் போது ீசியா வருது. ஆனா கூப்பிடும் போது கண்டிப்பா கடிணமா இருக்கும் போல இருக்கே...... உங்களது அறிமுகம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. அரவிந்தும் கூடிய சீக்கிறம் எழுத வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வருக வருக அரவிந்த்!

      Delete
  5. ஹாஹாஹா :) அதும்மா எனக்கு இயல்பிலேயே நினைவு சக்தி கொஞ்சமே கொஞ்சூடு நிறைய :) ஒருவரின் ஒரு பதிவை படிச்சாலும் அப்படியே பதிஞ்சிடும் மனசில் ::) அத்துடன் நீங்க எழுதுவது அப்படியே ஜாலியா ஆக்க தங்கச்சி கூட பேசறமாதிரி ஒரு இயல்பான எழுத்து பார்த்தவுடன் படிச்சவுடன் மனசை பற்றிக்கொள்ளும் ஆகவே அப்படித்தான் உங்களோட அந்த கலகல எழுத்துநடை மனசில் நல்லாவே பதிஞ்சிடுச்சி ..தொடர்ந்து எழுதுங்க .நானும் தொடர்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. மேடம், என்னது? கலகலன்னு இருக்கா? இனிமே கலக்கிடுவோம்.... எப்படியும் இன்னைக்கு ராத்திரி நான் தூங்க மாட்டேன்னு நினேக்கிறேன். ஒருவருடைய ஒற்றைப் பதிவைக்கூட நினைவில் வைத்திருக்க முடியும் என்றால் நீங்கள் ஒரு மிகச் சிறந்த வாசகி... மிக்க நன்றி.... வாங்க பழகலாம் வாங்க!

      Delete
  6. அருமை.,. தொடர்ந்து பகிருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சார்... மிக்க நன்றி...

      Delete

Popular Posts