Wednesday, January 09, 2019

கந்தர்வக் குரல்!



காதில் இனித்திடும் குழலென 
கோலக் குயிலதன் குரலதோ
மாதர் குரலதன் உவமையாம்!


நானும் மயங்கியே கரைந்திடும் 
ஆணின் குரலதன் உவமையை
தேடும் முயற்சியில் உணர்ந்ததை

ஆவல் மலர்ந்திடும் மனதினால் 
தேனில் கலந்திடும் தமிழிலே 
நானும் கவியினில் மொழிகிறேன்!

முழங்கிடும் இயல்பது உற்றதனால்
விலங்கினில் உறுமி்டும் சிங்கமதாய்   
விளக்குவர் குரலதன் வண்மையதை 

வஞ்சி இவள் கருத்தினைக் கவர்ந்த உன்
கொஞ்சும் குரல் உயிர்த்திடும் அமுதென   
பொங்கி வரும் கவலைகள் துடைத்திடும்!

ஒட்டுமொத்த இ்ருள் அதனை ஆட்சி செய்யும்
எட்டுத்திக்கும் ஒளி பரப்பி காட்சி நெய்யும்
தொட்டுவிட்டால் உயிர் வதைக்கும் மின்சாரம்!

கட்டிவைக்கும் கம்பீரம் பத்த வைக்கும் ரீங்காரம்
மொட்டவிழ்ந்த பூவதனின் மொடமொடத்த சிருங்காரம்
பட்டெனவே வாய்மொழிந்து என்  உயிர் தரித்த மின்சாரம்!

இரும்பதனை இழுத்துவிடும் காந்தமதன் இயல்பினிலோ
இருதுருவம் ஈர்த்திடவும் எதிர்த்திடவும் பழகிநிற்க
கந்தர்வக் குரலினிலே எந்நாளும் ஈர்ப்பு மட்டும்!

வார்த்தைகளில் விளையாடி உன் குரலின் மகிமை சொல்ல
வார்குழலாள் வகை ஏதும் தெரியாமல் கவியில் மெல்லத் 
தோற்றுவிட்டே களித்திருந்தாள் குரலதனின் இனிமை வெல்ல!

- கவிப்பூரணி

8 comments:

  1. ஆணின் குரலை ஒரு பெண்ணால் மட்டுமே வர்ணிக்க இயலும்....சிங்க கர்ஜனை என்ற உவமை, ஏதோ ஒரு சங்க இலக்கிய உவமை போல் தெரிகிறது....கவியும் ஆணின் குரலை விளக்க இயலாத போது ஒரு பெண் அதை செய்கிறாள் என்பது ஆச்சர்யம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நவீன். ஏதோ தோனுச்சு. கடைசியில அது சங்க இலக்கிய உவமையா? இருக்கலாம். எங்கேயோ படித்த பாதிப்புகள் நமக்குள் இருக்கத்தானே செய்யும்.

      Delete
  2. அற்புதம் வித்தியாசமான கற்பனையும் வாகாய் வந்து சேர்ந்த வார்த்தைகளும் கவிதைக்கு கூடுதல் அழகுசேர்க்கின்றன பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். தங்களைப் போன்றோரது வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு நல்ல உந்துதலைத் தருகின்றன.

      Delete
  3. Iron Titanium Art – Home Design, Development, & Construction
    Iron is an alloy that is commonly used in paintball, raffle, or titanium knife other sports. It is titanium bracelet an alloy that is very titanium nose hoop rare in some titanium ring areas. chi titanium flat iron

    ReplyDelete

Popular Posts