Monday, February 04, 2019

மௌனம்!

தொலையாது தவிர்த்திட
ஓடி ஒளிகி்றார்
தொலைக்காட்சிக்குள்
தொங்கிக் கொண்டு

அலைபேசிக்குள்
அலைந்து திரிந்து
இணையத்திற்குள்
இணைப்புத் தேடித்
தொலைந்தே தேடாமல்
தேடியும் தொலைக்காமல்
மௌனம் விடுத்து
தன்னைத் தானே 
உணர முடியாமல்!

கவிப்பூரணி

4 comments:

  1. நல்லாருக்கு கவிப்பூரணி...

    மௌனம் சில சமயம் பலதும் உணர்த்தும் இல்லையா? மௌனம் பல சமயங்களில் பல வேண்டாதவற்றைத் தவிர்க்கவும் உதவும். ஆனால் சில சமயங்களில் இதே மௌனம் இன்னல்களையும் தரும் தான்...

    எனக்கு மௌனம் தலைப்பை பார்த்ததும் மலரே மௌனமா பாட்டு நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட நினைவுக்கு வந்துச்சு. அப்புறம் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாட்டும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை! எத்தனை பாடல்கள். இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே! மௌனம் மின்னல்களைத் தரும்.... மிக அருமையான ஒற்றை வரிக் கவிதை.... நன்றி அக்கா....

      Delete
  2. அருமை ரசித்தேன்
    -கில்லர்ஜி

    ReplyDelete

Popular Posts