வெற்றிடமாய் வெளியதனை ஒத்திருந்த வாழ்வதனில் - பசுமைமிகு
வெற்றிலையின் உட்செலுத்தும் சுண்ணமுடன் பாக்கெனவே - பெருமைமிகு
கற்றறிந்தோர் சபையதனில் அரங்கேறும் படைப்பெனவே - இனிமைதரும்
சிற்றி்தழின் சுவைபொருந்தும் மழலையதன் மொழியெனவே - கனிவுமிகும்
நற்றமிழின் சாறிடையே தேன்குழைத்த இசையமுதாய்- வெண்மைநிற
சுற்றளவில் காய்ந்துகுளிர் வெண்ணிலவின் மகிழ்வெனவே - உவமை பல
பற்றவில்லை கோதையவள் வண்டாடும் செண்டுயென - கருணைபொழி
பற்றறுக்கும் மாதவன்தன் கைத்தளத்தை பற்றியவள் - மகிமைவழி
குற்றமின்றி வஞ்சியிவள் வாழ்வதனை நகர்த்திடவே - வலிமைசேர்
சுற்றமெலாம் வாழ்த்திடவே வையமெல்லாம் ஒலிக்கிறதே!
- கவிப்பூரணி

அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteநல்ல தமிழில் அழகான கவிதை! உங்களின் தமிழ் அருமை! சகோதரி/கவிப்பூரணி
ReplyDeleteதுளசிதரன், கீதா
நல்ல தமிழில் அழகான கவிதை!/// மிக்க நன்றி. நல்ல வேளை நான் பேசும்போது நீல்க கவனிச்சா என் தமிழின் அருமை தெரிஞ்சு இருக்கும்... அவ்வ்வ்வ்வ்
Deleteஉங்களின் தமிழ் அருமை! சகோதரி/கவிப்பூரணி///துளசி சார், கீதா அக்கா... மிக்க நன்றி..