Saturday, January 05, 2019

கனா!

மூனாம் வகுப்பில் வாங்கிய முட்டைகளும்
பேனா திருடிய பாலகப் பருவங்களும்
மீட்டே எடுத்திடும் ஆயுதம் கனா!


நாயது துரத்தி்ட விருட்டென ஓடியதும்
பேயதன் பயத்துடன் இருட்டினில் வாடியதும்
தாயவள் பகிர்ந்திட இனித்திடும் கனா!

காகிதக் கப்பலில் கடலிடை மிதந்ததும்
காவலர் வண்டியில் கள்வரைப் பிடித்ததும்
காலங்கள் கவர்ந்தி்டா காவியக் கனா!

பதினாறில் அரும்பிய முதன்முதல் காதலும்
பரிசாகப் பதிந்திட்ட முத்தத்தின் ஈரமும்
பரிமாற இயலாத ரகசியக் கனா!

விடை காணா கேள்விகளால் உற்றத்தார் துளைத்தெடுக்க
தடைதாண்டி கோல் பிடித்து முற்றத்தில்  படைத்தெழுதி   
அடைந்து திளைத்தி்ட்ட   லட்சியக் கனா!

  -கவிப்பூரணி

10 comments:

  1. super poem about dream really Awesome mam!

    ReplyDelete
  2. Replies
    1. நிஜமாலுமே எப்பவும் ஒரே உத்வேகத்தோட வலைப்பூக்களை வாசிக்கிரீர்கள். அத்தோடு எழுதுபவர்களையும் உற்சாகப்படுத்துகிரீர்கள். மிக்க நன்றி சார்.

      Delete
  3. கனா அழகான கனா...

    ReplyDelete
  4. பிடிச்சிருக்கு,

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு....! அந்த பாட்டு ஞாபகம்வருதுப்பா உன்னோட கருத்தைப் படிக்கும் போது... மகிழ்ச்சி..

      Delete

Popular Posts