Monday, June 03, 2019

மௌனத்தில்...



மொழி பேச மறுதலிக்கும்  நேரங்களில்
இதயம் பேசிவி்டும் ஏகாந்த மௌனத்தில்...
 
இதழோரம் வார்த்தைகள் சரமாகத்  தேங்கியும்
உணர்வுகள் மட்டும் கதை  பேசட்டும் என்று;


உதடுகளால் உச்சரித்து  உதிர்க்க முடியாமல்
இதயத்தை இயம்பாமல்  ஒளித்து வைத்தேன்;

ஊராரும் வீட்டாரும் காட்டாறும் அறியாமல்;
மலரோடும் சுவரோடும் எவரோடும் கூறாமல்;

சூரியனின் தீண்டுதலில் உருகிவிடும் பனித்துளியாய்
கேள்வியிலே கரைத்துவிட்டாய் காதல்மிகு கதிரவனே;

மைவிழியும் மையலிலே மலர்ந்துவிட  மயங்கி்டுதே
கை இரண்டில் எடுத்துவி்ட நெஞ்சமதும் ஏங்கி்டுதே!

- கவிப்பூரணி

2 comments:

  1. அருமை அருமை கவிப்பூரணி!! அசத்தல் கவிதை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி இருவருக்கும்...

      Delete

Popular Posts