Thursday, May 30, 2019

தொலையும் நெருக்கம்!



ஒற்றைச் சந்திப்பில்
என்னைப் புதிதாக்கி
எனக்குள் புதிதாகிறாய்
புரியாப் புதிராகி
அவிழாப் புதிராக்கினாய்!


காவல் கடந்தும்
ஆவல் படர்ந்தும்
தேடல் தொடர்ந்திருக்க
காதல் பசித்திருக்க
நீ கண் மறைந்திருக்க!

காத்துக் கிடந்தென்
இதயம் துவண்டிருக்க
நெருக்கம் உணர்ந்திட
அதிசயத் துடிப்பு
ரகசியச் சிலிர்ப்பு!

விரல் தொட
மலர் இதயம்
மலர் பெற
விரல் விழையும்
வரம் வருமா?
   
கொல்லாமல் கொல்லும்
தூரத்தை என்றும்
தூக்கித்தான் போட
எண்ணித்தான் ஏனோ
நெருக்கத்தைத் தொலைக்கிறேன்....

  -கவிப்பூரணி

No comments:

Post a Comment

Popular Posts