உன் கண் இமைகள்
நெடுஞ்சாலை நேராக
வாகனப் பயணம்!
என் நெஞ்சலைகள்
நெடுந்தூரம் தீராத
ஆசையில் பயணம்!
தொடங்கும் முடியும்
எல்லையில் உனது
சாலைப் பயணம்
தொடங்கிடும் தொடர்ந்திடும்
எல்லைகள் காணா
காதல் பயணம்!
தனிமைகள் இனிமைகள்
சேர்த்திட சேர்ந்திட
முன்னேறும் பயணம்!
இதயங்கள் இணைந்திட
தணிந்தாலும் தணித்தாலும்
பின்னோடும் பயணம்!
அடிக்கு அடி கவனம்
அடிக்கடி நிலவ
நேரா விபத்து!
நொடிக்கு நொடி நிகழும்
துடிப்பினில் துடிக்க
மீளா விபத்து!
வழித்தடம் தேடியே
விழித்திரை நாடிட
லட்சியப் பயணம்!
உயிர்வழி கூடியே
வழிந்திடும் மௌனத்தில்
ஏகாந்தப் பயணம்!
-கவிப்பூரணி
நன்று. பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
Delete