அறிவுப் பசிக்கு உணவிடும் - சிந்தை
தெளிவு கூட்டிட உதவிடும் - பண்பில்
சிறந்த நூல்கள் குவிந்திடும் - கண்கள்
படிக்க உள்ளம் பதிந்திடும் - உலகை
தனக்குள் காட்டி சுடர்மிகும் - மனதை
சான்றோர் வழியில் செலுத்தி்டும் - உவகை
உணர்வில் பொழிந்திடும் நூலகம்.
குழந்தை விரும்பிடும் கதைகளும் - பாங்கினில் -
கருத்தை நிறைத்தி்டும் கவிதையும் கலைதனில் -
புதுமை புகுத்திடும் கலைஞரும் - வளர்ந்திடும்
கணித நூல்களோர் அறிமுகம் - அறிவியல்
அறிஞர் படைப்புகள் பகர்ந்திடும் - வள்ளுவர்
தாகூர் சேக்ஸ்பியர் புலமையும் - சுவடியில் -
வடித்திடும் களஞ்சியம் நூலகம்
சரித்திரம் சுவையு்டன் இயம்பிடும் - புரட்சிகள்
விளைந்ததன் காரணம் புரிந்திடும் - உயிர்வகை
உருப்பெறும் ரகசியம் வெளியிடும் - நாகரீகம்
பலவகை பண்பாடும் தெரிந்திடும் - அரசியல்
விளையாட்டு காலவாரி அம்பலம் - மண்ணவர்
வீரமும் காதலும் பெருமிதம் - விருந்திடும்
புத்தகப் பெட்டகம் நூலகம்
விவசாயம் புவியியல் பொருளாதாரம் - இயங்கி்டும்
முறைகளை விழிவழி செலுத்திடும் - கற்கால
சித்திரம் சிற்பம் செப்பேடும் - தற்கால
விளையாட்டு இசைநடன நலினங்களும் - மெய்மையின்
ஞானியர் நல்வாக்கும் மொழிந்திடும் - பொய்மைகள்
அறியாமை வேருடன் அழித்திடும் - புத்தியைத்
தீட்டிடும் ஆலயம் நூலகம்.
-கவிப்பூரணி.
புத்தியைத் தீட்டிடும் ஆலயம் நூலகம்... சிறப்பான பார்வை.
ReplyDeleteநூலக நினைவுகள் எனக்குள்ளும்....
மிக்க நன்றி சார்!
Delete