Thursday, March 28, 2019

பூமாது!


குழலதனில் மயங்கி நிற்கும் மாடெனவே- கார்
குழலியவள் சொல்லதனில் சொக்கும் ஆடவனே - பூங்
குழலினிலே வாடும் மலரதனை  மாற்றுவதாய் - தேன்
குழலினைப்போல் முறுக்கி கடுகடுத்துச் சென்றாளே!


பாட்டினிலே புகழ்ந்து ஏத்திடுவார் மலரவளை-  படுத்தும்
பாட்டினிலே தெளிந்து வந்தவரை கேட்டாலே - படும்
பாட்டினையே கொதித்து உரைத்திடுவார் நிலத்தினிலே - சோகப்
பாட்டினையே படித்து நீட்டிடுவார் ஏட்டினிலே!

மலரதனின் மென்மையினைத் தாங்கியவள் பெண்ணெனவே- காதல்
மலர்ந்திடவே மின்னியவன் கருகிவிட்டேன் நெருப்பினிலே - நெஞ்சம்
மலருமென நம்பிவிட்டே வாழ்வதனை தொலைத்துவிட்டேன் வனத்தினிலே - முள்
மலரதுவும் பறந்ததுவே செழித்துநிற்கும்  வண்டிடமே!   

- கவிப்பூரணி

4 comments:

  1. அருமை அருமை!

    ரசித்தோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா அக்கா, துளசி சார்!

      Delete
  2. சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete

Popular Posts