இணைந்திருக்கும் உடலதனில் உயிரதுவும் - பிறந்து
நுழைந்திருக்கும் உலகமெனும் விடுதிதனில் - மகிழ்ந்து
திளைத்திருக்கும் மனமதுவும் பயணமதில் - அயர்ந்து
மலைத்திருக்கும் அடுக்கிவரும் துயரமதில்!
இசைந்திருக்கும் சுழலுகின்ற வாழ்வுடனே - கவர்ந்து
திகைத்திருக்கும் பரவசத்தில் நெகிழ்ச்சியுடன் - உறவில்
பிணைந்திருக்கும் பாசமெனும் மாயைதனில் - மயங்கி
சிதைந்திருக்கும் காலமதில் உருண்டோடி!
-கவிப்பூரணி
ஆற்று நீரோடு கற்கள் உருண்டோடும் போது ஆங்காங்கே முட்டி மோதி மழு மழு என்று ஆவது போல நம் வாழ்வும் காலத்துடன் பயணித்து அனுபவங்களால் முட்டி மோதி கற்று பக்குவம் அடையத்தான் செய்கிறது...அருமை கவிப்பூரணி!!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நல்ல உவமை! மிக்க நன்றி... துளசி சார், கீதா அக்கா...
Deleteசிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteதொடர் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!
Delete