சிந்திக்கும் நொடிப் பொழுதில் - மின்னும்
வெட்கத்தில் சிரிக்க வைத்து - நெஞ்சம்
ஏங்கியதே அடுத்த நொடி - கண்கள்
சிந்தித்தான் அனல் தெறிக்க - பொங்கும்
துக்கத்தில் கதறவிடும் - மன்னன்
படைப்பதனின் விசித்திரமோ?
மங்கைக்குள் மலர் அவிழும் - சித்தம்
வெப்பத்தில் கொதித்திருக்கும் - உள்ளம்
மௌனத்தில் உறைந்திருக்கும் - நித்தம்
எக்கணமும் அவன் பெயரே - செவியில்
ரீங்கரிக்கும் குழலிசையாய் - ஏக்கம்
நெஞ்சமதன் விந்தைமிகு வித்தையோ?
-கவிப்பூரணி
ரொம்ப நல்லாருக்கு கவிப்பூரணி. எப்படி இப்படி கவிதை அதுவும் சந்தத்துடன் எழுத வருது!!!
ReplyDeleteகீதா
மிக்க நன்றி அக்கா...
Deleteநன்று. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி சார்!
Delete