Wednesday, May 15, 2019

கூட்டுக் கிளி!



செயற்கைக் கூட்டுக்குள்
விதியால் அகப்பட்ட
இயற்கைக் கூடு!
இரக்கமில்லா இதயங்களின்
சதியார் சிறைகூட்டி
இயந்திரமாக்கப்பட்ட கூடு!

நீல வான் அதனின்
நீள அகலங்களை
நீள்வட்டமிட்டு
அளக்கப் பிறந்த கூடு!
நீளக் கம்பிகளின்
நீள அகலத்திற்குள்
நீங்கா வட்டமிட்டு
ஒடுங்கித் தவிக்கும் கூடு!
பசிக்காக மட்டுமல்ல,
ருசிக்காத போதும் கூட
உணவுக்கு வழியுண்டு!
எசமானர் உளம் மகிழும்
கீச்சிடும் கீதத்தின்
உணர்வுக்குள் வலியுண்டு!
தொலைந்துவிட்ட சுதந்திரத்தைத்
தேடித் திரியும்
தொடர் கனவுக்குள்
விடை காண முடியா
கேள்வி மட்டும்!
வலியா? வழியா? 

- கவிப்பூரணி

No comments:

Post a Comment

Popular Posts