Monday, January 21, 2019

நலவாழ்வு!

புலரும் காலை குளிர்ச்சியிலே - நிதம்
மலரும் சோலை மணத்தினிலே - கதிர்
உலவும் ஓலை இடையினிலே - உண்டு
நலமும் சாலை நடைதனிலே!


செடிகள் அளிக்கும் காய்கறியும் - படரும்
கொடியில் கிடைக்கும் பூசனியும் - இனிக்கும்
கனியில் உயிர்க்கும் சத்துகளும் - உனவில்
இனியும் ஒதுக்குதல் முறையன்றோ?

முகிலின் சிப்பியில் முத்ததுபோல் -தன்னுள்
சுகித்து வைக்கும் மழைத்துளியை - பரந்த
அகிலம் தழைக்க பிறப்பிக்கும் - மக்கள்
மகிழ்ந்து பருகிட வேண்டுமடா!

உடலும் மனமும் உழைத்திடவே - இரவின்
நிலவும் பொழியும் அன்பினையே - விழியின்
இமையும் தழுவும் உறக்கத்தையே - அறிந்து
துயிலச் சென்றிடு நேரத்திலே 

செல்வம் செழித்திடும் தரனியிலே - குலவும்
சொந்தம் வாழ்வதன் சுகத்தினிலே  - என்றே
நித்தம் மனதில் இருத்திவிடு - நன்மை
மொத்தம் உடலதன்  நலத்தினிலே!


                 -கவிப்பூரணி

4 comments:

  1. பொருட்சுவை அருமை.
    கவிநடை இனிமை
    "தரணியில் உணவின்"
    பொருட்டை உணர்த்தினீர்
    கவிப்பூரணி அம்மா!...

    ReplyDelete
    Replies
    1. கவியினில் கருத்தும்
      பாங்குடன் இயம்பியே
      மனதினில் மகிழ்வை
      உணர்வுடன் ஊற்றியே
      உரைத்த மனதிற்கு
      பற்பல நன்றிகள்

      Delete

Popular Posts