Saturday, January 19, 2019

தையலுக்குத் தையல்!



ரெடிமேட்டாடைகளால் போரடித்து - நல்ல
சுடிதார் துணியை எடுத்துவந்தே - தையல்
கடையில் கொடுத்து தைக்கச் சொன்னேன் - அளவும்
படித்தே எடுத்தான் டேப்பினிலே!


கடைக்காரனோ சரக்கின் வசமிருக்க - அவன்
படைப்பாற்றலை மலைபோல் நம்பிநிற்க  - நானும்
கிடைத்திடவே நாளிரண்டு ஆகுமென்றான் - திரும்பி
வடைசுடவே படையெடுத்து வீடு வந்தேன்!

நாளிரண்டு ஆன பின்னே ஆவலோடு வாங்கவந்தேன் - ஆங்கே
தாளிரண்டு ஒதுக்கி  வைத்து கொண்டை கொண்ட மான்விழியாள் - தங்க
கையிரண்டை நீட்டிவிட்டே ஆடை காட்டி சண்டையிட - எடுத்த
அளவினுக்கும் தைத்ததற்கும் சம்மந்தமே இல்லை என்றாள்!

அவளுடைய அளவினிலே என்னினிய சுடிதாரும் - மொக்கை
கலரதனில் நாய்துரத்தும் அவளுடைய சுடிதாரோ - மங்கை
கொடியிடையாள் என்னுடைய அளவினிலே தைத்திருக்க - சொம்பால்
அடித்துவிட்டு பணம்பிடுங்கி கோபத்திலே சாபமிட்டோம்!

என்னினிய கணவனிடம் நடந்ததையே நான் உரைக்க - அந்த
மற்றொருவள் வனப்பதனைக் கேட்டவரைக் கண் முறைக்க - சிந்தும்
சிரிப்பினிலே என்னாடைதனை அவர் குறைக்க - தந்தே
சரிஎன்றேன் கட்டுடலின் வலிமைதனில் தினம்  திகைக்க! 

               -கவிப்பூரணி

5 comments:

  1. super super mam! what happen there is no song for long time?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி... பாடல் நிச்சயம் வரும். எப்போனுதான் தெரியல...

      Delete
  2. நல்லா பிரிச்சி தெச்சிட்டீஞ்க போஞ்க!

    ReplyDelete

Popular Posts