Monday, February 11, 2019

மெய் அன்பு!



மெல்லிசையின் சுகம் கலந்து
கைபேசி  மெலிதாய்  சிணுங்குகையில்
விழித்திரையில் மட்டுமல்ல
உன்  நினைவுகள் ஊற்றெடுக்கும்
என்   மனத்திரையிலும்
காட்டாற்று வெள்ளமாய்
உன் பிம்பம் நிழலாட,
ஊர் எல்லைகள் கடந்தும்
வேர் பற்றிய நிலமாக
மனதினை சில்லெனப் பற்றி
அன்பை காலமறியாமல் 
அனல் மூட்டி பற்ற வைத்து,
நீ நடத்தி்டும் இன்ப வேள்வியில்
நிலை தடுமாறி நா பேச்சிழக்க,
மௌனம் இ்தயத்தின்   மொழியாக,
அலைக்கற்றையின் இணைப்பதனில்
இணைகின்றன அன்பால்  இதயங்கள்!


மெய் அன்பு உணரா  மக்கள் எல்லாம்
மெய் தீண்டலில் முடிவதே அன்பென்பர்
கை தீண்டா மொழியில் மட்டும்  வெளியாகி
மை தீட்டும் விழியின் வழியில் நீராகி
தொடங்கியதும்  எங்கே எனத் தெரியாது,
காலம் தரவிருக்கும்  முடிவதுவும் அறியாது,
மகிழ்வி்னிலும்,  உள்ளத்  தொய்வினிலும்,
பெற்ற வெற்றியிலும், பெறும் தோல்வியிலும்,
வாழ்க்கை தொடர்ந்திடினும், முடிந்திடினும்,
வித்ததனில் அடங்கியுள்ள மரம் போலும்
சத்தமதில் மறைந்திருக்கும் இசை போலும்,
ஓவியனின் உள்ளிருக்கும் சித்திரம் போலும்,
உள்ளத்தின் உள்ளிருந்து ஊற்றெடுத்து
உணர்வுகளின் வழித்தடத்தில் பூச்சொறிந்து
உயிரில் கலந்து நிறைந்து விரிந்திருக்கும்
வாழ்வை வாழ்வதற்கு சக்தி எல்லாம்
அனுதினமும் வாரி வாரி தந்து நிற்கும்!

- கவிப்பூரணி

8 comments:

Popular Posts