Friday, June 21, 2019

இரவின் மடியில்!



கருமை எங்கும் பொங்கி  மேலிட - வானில்
இளமை பொங்கும் வெள்ளி நீந்திட - கூடும்
இனிமை கொஞ்சும் கோடி நட்சத்திரம் - நோக்கும்
மழலை நெஞ்சம் நாடி பிடித்திடத் துடித்திடும்!

Sunday, June 09, 2019

இந்த அநியாயத்த எங்க போய் சொல்ல


தோழியர் இருவரும் ஒன்றாக கதை பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு அலைபேசி அழைப்பு.
“அம்மா, வீடு தெறந்து இருக்கு. அக்கா வீட்ட பூட்டாமலேயே போய்ட்டா போல இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று எதிர் முனையிலிருந்து குழந்தை கூற, உடனே அக்காவை  வரச்சொல்வதாகவும் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கிறதா என்பதை சரி பார்க்கும்படியும் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு மூத்தவளுக்கு உடனே அழைத்து சரமாரியாக அர்ச்சனை செய்தாள் மாலினி.
‘இவ்வளவு பெரிய பொண்ணா இருக்க, வீட்ட ஒழுங்கா பூட்டீட்டு போகணும்னு தெரியாதா? பூட்டி முடிச்சதும் இழுத்துப் பார்த்துட்டுதானே நகரணும்னு படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி  சொல்லி இருக்கேனில்ல? இப்ப வீடு திறந்திருக்குனு பாப்பா கால் பண்றா. அவ வேற பயந்துட்டு இருக்கா. சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டு திருடன் எவனாச்சும் வந்துட்டு போன அடையாளம் இருக்கானு பாத்துட்டு சொல்லு’ என்று இடி விழுந்தார்போல் முழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்து பின் அருகிலிருந்த கீதாவி்டம் புலம்ப ஆரம்பித்தாள்.
"இந்த பொண்ணுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒரே விளையாட்டுத்தனம்தான்.  ரொம்ப அசால்ட்டா இருக்கா, அ்ப்டியே அவங்க அப்பா மாதிரி" என்று அவளது கணவனையும் சைக்கிள் கேப்பில் திட்டிவிட்டு, பின்னர் இளையவளுக்கு அழைத்து மூத்தவள் வருவதை சொல்லிவிட்டு அப்படியே வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பதையும் குழந்தையிடம் கேட்டு  உறுதி செய்து கொண்டு மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினர். அவர்கள் சாப்பிடும் வேளையில் கொஞ்சம் கொசுவர்த்திச்  சுருள்கள் சுழல ஃபளாஷ் பேக் பார்க்கலாம்.

Friday, June 07, 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்...


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.

Monday, June 03, 2019

மௌனத்தில்...



மொழி பேச மறுதலிக்கும்  நேரங்களில்
இதயம் பேசிவி்டும் ஏகாந்த மௌனத்தில்...
 
இதழோரம் வார்த்தைகள் சரமாகத்  தேங்கியும்
உணர்வுகள் மட்டும் கதை  பேசட்டும் என்று;

Thursday, May 30, 2019

தொலையும் நெருக்கம்!



ஒற்றைச் சந்திப்பில்
என்னைப் புதிதாக்கி
எனக்குள் புதிதாகிறாய்
புரியாப் புதிராகி
அவிழாப் புதிராக்கினாய்!

Wednesday, May 15, 2019

கூட்டுக் கிளி!



செயற்கைக் கூட்டுக்குள்
விதியால் அகப்பட்ட
இயற்கைக் கூடு!
இரக்கமில்லா இதயங்களின்
சதியார் சிறைகூட்டி
இயந்திரமாக்கப்பட்ட கூடு!

Monday, May 13, 2019

பயணம்!



உன் கண் இமைகள்
நெடுஞ்சாலை நேராக
வாகனப் பயணம்!
என் நெஞ்சலைகள்
நெடுந்தூரம் தீராத   
ஆசையில் பயணம்!

Tuesday, April 09, 2019

நூலகம்!



அறிவுப்  பசிக்கு உணவிடும் - சிந்தை 
தெளிவு கூட்டிட உதவிடும் - பண்பில்
சிறந்த நூல்கள் குவிந்திடும் - கண்கள்
படிக்க உள்ளம் பதிந்திடும் - உலகை
தனக்குள் காட்டி சுடர்மிகும் - மனதை
சான்றோர் வழியில் செலுத்தி்டும் - உவகை
உணர்வில் பொழிந்திடும் நூலகம்.

Thursday, March 28, 2019

பூமாது!


குழலதனில் மயங்கி நிற்கும் மாடெனவே- கார்
குழலியவள் சொல்லதனில் சொக்கும் ஆடவனே - பூங்
குழலினிலே வாடும் மலரதனை  மாற்றுவதாய் - தேன்
குழலினைப்போல் முறுக்கி கடுகடுத்துச் சென்றாளே!

Friday, March 15, 2019

காதல் எழுச்சி!



உனது வருகையினால்
கிளர்ந்து எழுந்தது
ஆழ்நிலை உறக்கத்தின்
மயக்கத்தில்  கிடந்த
உடலின் கூறுகள்
என்று மட்டும்தான்
எண்ணி இருந்தேன்
எனது கண்களின்
எல்லையில் இருந்து 
உனது தோற்றம்       
மறையும் தருணம்   வரை!

Wednesday, March 13, 2019

ஏக்கம்..!



சிந்திக்கும் நொடிப் பொழுதில்  - மின்னும்
வெட்கத்தில் சிரிக்க வைத்து - நெஞ்சம்
ஏங்கியதே அடுத்த நொடி - கண்கள்
சிந்தித்தான் அனல் தெறிக்க - பொங்கும்
துக்கத்தில் கதறவிடும் - மன்னன்
படைப்பதனின் விசித்திரமோ?

Monday, March 11, 2019

உருண்டோடும் காலமதில்...



இணைந்திருக்கும் உடலதனில் உயிரதுவும் - பிறந்து
நுழைந்திருக்கும் உலகமெனும் விடுதிதனில் - மகிழ்ந்து
திளைத்திருக்கும் மனமதுவும் பயணமதில் - அயர்ந்து
மலைத்திருக்கும் அடுக்கிவரும்  துயரமதில்!

Monday, February 25, 2019

இதயவீணை!



காட்டாற்று வெள்ளமென பாய்ந்தோடும் சிந்தனையில் - பரவும்
ஏகாந்தம் தென்றலிடை பாய்போடும் வண்டினங்கள் - விரவும்
தீந்தேனில் முழுகிவிட எத்தனிக்கும் வேளையிலே - நிலவில்
காய்ந்தோங்கும் வெள்ளியலை புள்ளியிட்டு கோலமிட - மலரும்
தேன்தோய்ந்த செங்கமலம் அரும்பெடுத்த நொடிதனிலே - உலவும்
மீன்போன்ற கண்ணிரண்டில் கசிந்தொழுகும் நீர்த்துளிகள் - விலகும்
நீ தீண்டும் கணப்பொழுதில் இனித்துவிடும் அதிசயமோ? 

Thursday, February 14, 2019

என்னைத் தொலைத்து!

பயனற்ற தரிசு நிலமாய்
நினைவற்று  நான்  இருக்க
தூரலின் துளி ஒன்றாய்
நனைத்தாய் என நினைத்திருக்க 

Monday, February 11, 2019

மெய் அன்பு!



மெல்லிசையின் சுகம் கலந்து
கைபேசி  மெலிதாய்  சிணுங்குகையில்
விழித்திரையில் மட்டுமல்ல
உன்  நினைவுகள் ஊற்றெடுக்கும்
என்   மனத்திரையிலும்
காட்டாற்று வெள்ளமாய்
உன் பிம்பம் நிழலாட,
ஊர் எல்லைகள் கடந்தும்
வேர் பற்றிய நிலமாக
மனதினை சில்லெனப் பற்றி
அன்பை காலமறியாமல் 
அனல் மூட்டி பற்ற வைத்து,
நீ நடத்தி்டும் இன்ப வேள்வியில்
நிலை தடுமாறி நா பேச்சிழக்க,
மௌனம் இ்தயத்தின்   மொழியாக,
அலைக்கற்றையின் இணைப்பதனில்
இணைகின்றன அன்பால்  இதயங்கள்!

Friday, February 08, 2019

கைத்தளம் பற்றி!

வெற்றிடமாய்    வெளியதனை ஒத்திருந்த வாழ்வதனில் - பசுமைமிகு
வெற்றிலையின் உட்செலுத்தும் சுண்ணமுடன் பாக்கெனவே - பெருமைமிகு
கற்றறிந்தோர்  சபையதனில் அரங்கேறும் படைப்பெனவே - இனிமைதரும்

Monday, February 04, 2019

மௌனம்!

தொலையாது தவிர்த்திட
ஓடி ஒளிகி்றார்
தொலைக்காட்சிக்குள்
தொங்கிக் கொண்டு

Thursday, January 31, 2019

புதிய அறிமுகங்களும், பழைய நி்னைவுகளும்

திருவிளையாடல் படத்துல நாகேஷ் புலவரா இருப்பாரு. அதுல ஒரு கேள்வி  கேட்பார்  சிவாஜி. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று. உடனே பதறிப் போய் நாகேஷ், இல்லை இல்லை, கேள்விகளை நானே கேட்கிறேன். ஏன்னா எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும்னு அவசரமா பதில் சொல்லுவார்.“என்ன? பீடிகை எல்லாம் பெருசா இருக்கே? திடீர்னு திருவிளையாடல் படத்துக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?” இப்டி எல்லாம் உங்க மனதின் குரல் என் செவியில் வட்டமிடுகிறது. வெயிட் வெயிட். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.

Wednesday, January 30, 2019

முதல் புதினமும், முதல் பார்வையும்

புதினங்கள் வாசிப்பது என்றாலே அலாதி பிரியம் எனக்கு. உங்களில் பலருக்கும் அப்படித்தான் என்று நம்புகிறேன். ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் அது ஒரு அழகான தியானம் போல் ஒன்றிவிடுவேன். மனம் முழுவதும் அதிலேயே லயித்துவிடும். வேறு எந்த வேலைக்கும் போக விருப்பம் எழாது. அந்த ஒரு காரணத்திற்காகவே நாவல் படிக்கும் பழக்கத்தை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒதுக்கியே வைத்திருந்தேன். மீண்டும் 2018 நவம்பரில்தான் துவங்கினேன். சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் தி.ஜானகிராமனின் மோகமுள் ஆகிய இரு நாவல்களும் அப்போது வாசித்தேன்.

Wednesday, January 23, 2019

பஞ்ச பூதம்!



விண்ணில் மண்ணில் தீ காற்று நீரில்
தங்கும் அன்பின் ரீங்கார நாதம்
இன்பம் பொங்கும் பாட்டாக நாளும்
பாடி விரிந்திடும் படைப்பெனவே!   

Monday, January 21, 2019

நலவாழ்வு!

புலரும் காலை குளிர்ச்சியிலே - நிதம்
மலரும் சோலை மணத்தினிலே - கதிர்
உலவும் ஓலை இடையினிலே - உண்டு
நலமும் சாலை நடைதனிலே!

Saturday, January 19, 2019

தையலுக்குத் தையல்!



ரெடிமேட்டாடைகளால் போரடித்து - நல்ல
சுடிதார் துணியை எடுத்துவந்தே - தையல்
கடையில் கொடுத்து தைக்கச் சொன்னேன் - அளவும்
படித்தே எடுத்தான் டேப்பினிலே!

Wednesday, January 09, 2019

கந்தர்வக் குரல்!



காதில் இனித்திடும் குழலென 
கோலக் குயிலதன் குரலதோ
மாதர் குரலதன் உவமையாம்!

Monday, January 07, 2019

சாதனை ஆக்கிடடா!



கிழக்கே உதித்திடும் கதிரவன் - அவன்
திடமாய் உணர்த்திடும் ரகசியம், - நாம்
அழைத்தே  அறிவிப்பு    செய்குவோம் - அதை
மனதில் பதித்திடு தினந்தினம்!

Saturday, January 05, 2019

கனா!

மூனாம் வகுப்பில் வாங்கிய முட்டைகளும்
பேனா திருடிய பாலகப் பருவங்களும்
மீட்டே எடுத்திடும் ஆயுதம் கனா!

Tuesday, January 01, 2019

2019- ன் தொடக்கமும், கவிப்பூரணியின் வலைப்பயணத் தொடர்ச்சியும்....



அன்பு மனம் கொண்டு ஆவலோடு கவிப்பூரணியின் வலைப்பூவில் மணம் பரப்ப அடி எடுத்து வைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் பணிவான மார்கழித் திங்கள் 17ஆம் நாள் மற்றும்
2019 ஆம் ஆண்டு முதல் நாள் வாழ்த்துக்களும்,  வணக்கங்களும் உரித்தாகின்றன.

Popular Posts